Thursday, December 2, 2010

வாழ்த்துகிறேன்

உனக்கு வாழ்த்துச் சொல்ல
நான் வலுவானவனுமில்லை
உன்னை ஆசீர்வதிக்க
நான் வரம் வாங்கி வந்தவனுமில்லை

        காரணங்கள் மறந்து போய்
        கடைசியில் பிரிவு மட்டுமே
        நிரந்தரமாகிப் போகும் - சில
        அண்ணன்-தம்பி உறவைப் போல
        நம் நட்பை மாற்றிட
        நினைக்கிறாய் நீ..,

யாரோடும் எனக்கு கோபமுமில்லை
யார் மீதும் எனக்கு வருத்தமுமில்லை

        உனக்கு தெரியும்
        மலர்ந்தால் ரோஜாவாய்  சிரிக்கும்
        கசக்கினால் அத்தராய் மணக்கும்
        நம் நட்பு

எந்த தேவதூதர்களோடும்
நான் தேநீர் குடித்ததில்லை
எல்லா சாத்தான்களோடும்
சாராயம் குடித்திருக்கிறேன்

        சில நேரங்களில்
       அதிகம் பேசிவிடுகிறேன்
       அது என் பலவீனம்
       சில நேரங்களில்
       குறைவாகவே பேசுகிறேன்
       அது என் சாதூர்யம்
       மிக அரிதாகவே வாய்க்கிறது
       சில தருணங்கள்
       மௌனமாக இருப்பதற்கு

கடவுளை சபிக்க
நான் கொடூரமனவனுமில்லை
கடவுளிடம் கையேந்த
நான் கோழையுமில்லை

       ஆணையிடுகிறேன் ஆண்டவனுக்கு
       அவன் (பிறந்த நாள் )
       ஆசி வழங்குவான்  உனக்கு
  
                                     நண்பன் கார்த்திக்கு
                                      சிநேகமுடன்  சிராஜ்  

Tuesday, October 12, 2010

சுயம்பு

 நூறு சதவீதம் பொருத்தமான
அழகிய பெண்ணொருத்திய
சந்திக்க தவறிய கணத்திலிருந்து


தனிமையின் துயரம் சுமந்த
மேகம் ஒன்று.
தனக்கான விளைநிலம் தேடி
காற்றின் திசையெங்கும்
மிதந்து கொண்டிருக்கிறது.

எல்லா தேடுதலும் தொலைந்த பிறகு
உஷ்ண மூச்சில்
தீயாய் எரியும் தேகம்
இரவுகளில் வெப்பமாகி புழுங்கும்
மண்ணறைக்குள் மட்கும்
பிரேதத்தைப் போலவே மாறும்.

பின்னிரவில் ஸ்கலிதமாகும் துளி பிசைந்து
விடியலில் மீண்டும்
உயிர்ப்பிக்கப்படுகிறேன்.
ஹவ்வாக்கள் இல்லாத சூன்யத்தின்
ஆதாமாய்..,

Thursday, September 30, 2010

தீர்ப்பு நாள்

ஆமாம்,
உண்மையிலே
தீர்ப்பு நாள்
நெருங்கிவிட்டது
காலம்தோறும் 
நீதி மன்றங்கள்
தீர்ப்பை மட்டுமே
வழங்குகின்றன
எளியவர்கள்  என்ன செய்ய
எல்லாப் புகழும் இறைவனுக்கே

Saturday, August 14, 2010

ஆதம், ஏவாள் மற்றும் ஆப்பிள்

புனித மாதத்தின் பகல் பொழுதில்
பசியில் தியானித்திருக்கிறேன்
எதிர் வீட்டு பால்கனியில்
ஆப்பிள் வெட்டும் ஏவாளின்
நகமும் கத்தியும்
மிரட்சியை தருகின்றன
எதிரே நீளும்
மின் கம்பிகளில் நெளியும்
சர்ப்பமொன்று
மின்தடை கடக்கிறது

                        




Wednesday, August 4, 2010

பூப்படைந்த சப்தம்

குரல் தானம் செய்கிறேன்
பெற்றுக்கொண்டு இல்லை என்றாவது
சொல்லிவிடு.
மௌனத்தை மேடை போட்டு
விளக்க முடியாது.

Tuesday, August 3, 2010

என்ன சொல்லப் போகிறாய்..?

 என் காதலை
எல்லோரிடமும்  சொல்லிவிட்டேன்
உன்னைத் தவிர

Friday, July 30, 2010

அட அட அட.......

உனது வீர வாள்
எனக்கு
சவரக்கத்தியாக கூட
பயன்படவில்லை
நான்
தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன்......